மனிதர்களை அச்சுறுத்தும் பயங்கரமான இரத்தக் காட்டேறிகள்!! பெரும் பீதியில் இரவுப் பொழுதைக் கழிக்கும் நகர வாசிகள்!

ஆபிரிக்க நாடுகளில் இன்றும் மூடநம்பிக்கைகள் அதிகமாக வழக்கத்தில் உள்ள நிலையில் ஆபிரிக்காவின் தென்கிழக்கு பிராந்திய நாடுகளில் ஒன்றான மலாவியில் பேய்கள் தொடர்பான வதந்திகள் அண்மைக்காலமாக அதிகளவில் பரவி வருகின்றன.இந்நிலையில், முலான்ஜே மற்றும் பலொம்பி ஆகிய நகர மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். மந்திர வித்தைகளினால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் இறப்புக்களைத் தவிர்க்கும் பொருட்டு மலாவி அரசாங்கம் இரவு நேரத்தில் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்துள்ளது.இதன்படி அந்தப்பகுதியில் இரவு 7 மணி தொடக்கம் அதிகாலை 5 மணிவரையான 10 மணித்தியால ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ளது.

மனிதர்களின் இரத்தத்தைக் குடிக்கும் இரத்தக்காட்டேறிகள் என அப்பகுதி மக்கள் நம்பும் மாய உருவங்களிடம் இருந்து தம்மையும், தமது அயலவர்களையும் பாதுகாக்கும் நடவடிக்கையில் மலாவியின் தென் பிராந்திய மக்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து இரவு நேரங்களில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், காவலில் ஈடுபட்டிருந்த மக்களிடம் இரத்தக்காட்டேறிகளைப் போல வேடமிட்டு மக்களை அச்சுறுத்தி வந்த ஐவர் தற்போது வசமாக சிக்கிக்கொண்டதுடன், பீதி காரணமாக கடும் அச்சத்தில் இருந்த மக்கள் தம்மிடம் சிக்கிய ஐவரையும் நையப்புடைத்துள்ளனர்.இதேவேளை, கடந்த 2002ஆம் ஆண்டும் இதேபோன்று திடீரென பரவிய பேய்கள் தொடர்பான வதந்திகளால் மலாவியில் தென்பகுதிகளில் கலவரங்கள் வெடித்திருந்தன.மனித இரத்தத்தைக் குடிக்கும் பேய்களின் நடமாட்டம் இருப்பதாக பரவிய தகவல்களையடுத்து, மலாவியின் தென்பகுதியில் நிலைக் கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் சபை தனது உத்தியோகத்தர்களை அவசரமாக வெளியேற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்