இரவு தாமதமாக உறங்குபவர்களா நீங்கள்? அப்படியானால் விரைவில் இந்த அபாய விளைவுகள் உங்களில் வெளிப்படுமாம்!!

இரவில் அதிக நேரம் கண் விழித்திருப்பதைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், அதிக நேரம் கண்விழித்திருப்பவர்கள் நேரத்திற்கு உறங்குபவர்களை விடவும் பின்தங்கி இருப்பார்கள் எனவும்ஆய்வுகள்ல் தெரிய வந்துள்ளது.கவனக் குறைவு:அதிகநேரம் விழித்திருப்பதால் உடல் சோர்வடையும் உடலிற்கு அதிக நேரம் ஒரு விடயத்தில் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும்.ஒரு கால கட்டத்திற்கு பின் கவனக்குறைவு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். இதோடு மனச் சோர்வு காரணமாக உடலில் கணிசமான சுகாதார வீழ்ச்சி ஏற்படும்.இரவில் நேரம் தவறாமல் உண்பதும் உறங்குவதும் முக்கியமானது. இரவில் தேவையான அளவு உறங்குதல் அடுத்த நாள் முழுவதும் உங்களை புத்துணர்வுடனும் உங்கள் வேலைகளில் கவனத்துடனும் செய்வதற்கு வழிவகுக்கும்.கரடுமுரடான குரல்உங்களுக்கு போதியளவான உறக்கம் இல்லாத சந்தர்ப்பங்களில் குரல் கடுமையாக இருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? நீங்கள் வழமையான பழக்கமாக இதை கொண்டிருந்தீர்களானால் உங்கள் குரல் வாழ்க்கை முழுவதும் கரடுமுரடாக அமைய வாய்ப்புகள் அதிகம்.தலைவலி , பிற்புற வலிகள்:குறைந்த தூக்கம் மூளையை மிகவும் மோசமாக பாதிக்கிறது. அதன் செயல்பாடு கணிசமாக பாதிக்கப்படுகிறது மற்றும் நீங்கள் தொடர்ந்து தலைவலி மூலம் போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள். உங்கள் முழு உடல்நலத்திலும் தொடர்ச்சியான பாதிப்புகள் ஏற்படும். இருமல் மற்றும் மிதமான காய்ச்சல் ஆகியவற்றை நீங்கள்எதிர்கொள்ள வேண்டும்.

உடல்பருமன்:தாமதமாக தூங்கும் பழக்கத்தை கொண்டவர்கள் தாமதமாக தங்கள் காலை உணவை எடுப்பார்கள். அது உங்கள் முழு உடல் நலத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எல்லா விதமான விட்டமின்களும் அடங்கிய உணவை நீங்கள் எடுக்க வேண்டும், நேரம் தவறிய உறக்கத்தினால். காலையில் அனைத்து வேலைகளிலும் குழப்பம் ஏற்படும். இதனால் பலர் காலை உணவே எடுத்துக்கொள்வதில்லை.உணவு எடுத்துக் கொள்பவர்கள் சரியான சத்துள்ள உணவை எடுப்பதில்லை. அதிக கொழுப்புள்ள உணவுகளை எடுத்து கொள்வார்கள். இதனால் உடல் பருமன் அதிகரிக்கும். அதோடு காலையில் அவசரமாக வேலைகளை செய்வதால் உடற்பயிற்சிக்காக நேரம் ஒதுக்குவதில்லை. ஆகவே பருமன் அதிகரிக்கும்.

கண்கள் கீழ் கருவளையங்கள்:உங்கள் கண்கள் கீழ் அசிங்கமான கருவளையங்கள் உங்கள் தோற்றத்தை கெடுக்கும். உங்கள் தூக்கம் நீண்டநாள் தாமதமாகவே இருந்தால் கருவளையங்கள் நிரந்தரமாகிவிடும். பொதுவாக இதிக வேலைப்பழு உள்ளவர்கள் மற்றும் படிக்கும் மாணவர்களிடம் மருவளையங்களை அவதானித்திருப்பீர்கள் அதற்கு இரவு அதிக நேரம் கண்விழித்திருப்பதே காரணமாகும்.நோய்கள் வருவதற்கு காரணமாக அமையும்:இந்த பழக்கத்தால் சராசரி மனித வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் நாளடைவில் நோயாக மாறும்.அவை உங்கள் வாழ்க்கையில் பெரும்பகுதியை அழித்து விடும். எனவே நேரத்திற்கு தூங்குதல் உங்கள் முழு வாழ்க்கைக்கும் சிறப்பாக அமையும்.

மன அழுத்தம்:சாராசரி மனிதனுக்கு தேவையான உறக்கமின்மை, மனஅழுத்தம், ஆகியவை முக்கிய காரணமாகும் இந்த மன அழுத்தமே பல நோய்களுக்கு அத்திவாரமிடும் என்பதை மறக்காதீர்கள்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்