ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார்..!! ஆனால், சபாநாயகர் கருஜெயசூரியவின் அதிரடி அறிவிப்பு..!!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதற்காக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராக இருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.கரு ஜயசூரிய வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் இதனைக் கூறியுள்ளார்.கடந்த சில வாரங்களில் கௌரவமிக்க பௌத்த மதத்தலைவர்கள் உட்பட சங்க சபையினர், ஏனைய பௌத்த பிக்குகள் பல்வேறு சிவில் அமைப்புக்களின் தலைவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள், தொழில்முனைவோர், இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மட்டுமல்லாது அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு தன்னை தொடர்பு கொண்டதாகவும், சில முக்கிய விடயங்களுக்காக ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுமாறு தன்னை தொடர்பு கொண்டவர்கள் கோரியுள்ளனர்.சிலர் தனிப்பட்ட ரீதியில் என்னை சந்தித்தனர். தொலைபேசியில் தொடர்புகொண்டு, பகிரங்க செய்தியாளர் சந்திப்பை நடத்தியும் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும், நிலவும் அரசியல் குழப்பத்தை போக்கி கண்ணியமான ஆட்சியை ஏற்படுத்துவதற்காக நம்பிக்கைமிக்க தலைவர் ஒருவர் நாட்டிற்கு தேவை என்பதால், தம்மிடம் இந்தக் கோரிக்கையை விடுப்பதாகவும் அவர்கள் கூறினர்.அனைத்து தரப்பினரும் தம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. எவ்வாறாயினும், ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதே எனது கடமையாக இருக்கும்.

1995 ஆம் ஆண்டு முதல் நாம் தொடர்ந்தும் எதிர்நோக்கி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக ஒன்றிணையும் அரசியல் சக்திகளுடன் இணைந்து மட்டுமே, இந்த கோரிக்கை தொடர்பாக ஆராய்ந்து பார்க்க முடியும்.அத்துடன் 17வது திருத்தச் சட்டத்தின் மூலம் கொண்டு வரப்பட்டு 19வது திருத்தச் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட முன்னேறிய ஜனநாயக மறுசீரமைப்புக்காக குரல் கொடுக்கும் தரப்புடன் மட்டுமே இதனைச் செய்ய முடியும்.முன்னேறிய ஜனநாயகத்துடன் கூடிய பொருளாதாரம் மற்றும் ஒழுக்கத்தால் வலுப்பெற்ற பாதுகாப்பான தேசத்திற்கான அடிப்படையை உருவாக்க ஒரு சிறிய காலத்திற்கு செய்யும் அர்ப்பணிப்பே அன்றி, ஜனாதிபதிப் பதவியை எதிர்பார்த்து மேற்கொள்ளும் தலையீடாக இருக்காது.அத்துடன் ஐக்கிய தேசிய முன்னணியை பிரதானமாக கொண்ட தரப்பினரை பிரதிநிதித்துவம் செய்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது என்றால்இ அது கட்சியின் யாப்பு மற்றும் அனைத்து தரப்பினரின் ஆசிர்வாதத்துடன் நடக்க வேண்டும் என்பது தனது உணர்வு எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்