முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபராக எம்.பிரதீபன் பதவியேற்பு..!

முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபராக எம்.பிரதீபன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது கடமைகளை நேற்று முன்தினம் (செப்ரெம்பர் 9) திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.இலங்கை நிர்வாக சேவையில் மூத்த அதிகாரியான எம்.பிரதீபன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலராகக் கடமையாற்றி வந்தார்.இந்த நிலையில், அவர் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபராக பொதுநிர்வாக அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.முல்லைத்தீவு மேலதிக அரச அதிபர் எம். பிரதீபன், போர்க்காலப் பகுதியில் யாழ்ப்பாணம் மாவட்ட திட்டப் பணிப்பாளராகவும், பின்னர் கோப்பாய் பிரதேச செயலாளராகவும் பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்