நிலவில் தரையிறங்கும் போது காணாமல் போன விக்ரம் லேண்டர்’ கண்டுபிடிப்பு..!!

நிலவில் சனிக்கிழமை அதிகாலை தரையிறக்கப்பட்டு தொடர்பு துண்டிப்பான விக்ரம் லேண்டர் தெர்மல் இமேஜிங் முறையை வைத்து ஆர்பிட்டர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சந்திரயான் – 2 நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் என்று நினைத்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான் மிச்சமாகி உள்ளது. ஆம், சந்திராயன்- 2 இன் விக்ரம் லேண்டர் நிலவில் திட்டமிட்டபடி இறங்கவில்லை. மாறாக நிலவிற்கு மிக அருகில் 2.1 கிலோ மீற்றர் தூரம் வரை விக்ரம் லேண்டர் சென்றது. அதன்பின் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், சந்திரயான் -2 இன் விக்ரம் லேண்டர் எங்கே சென்றது என்று தெரியாமல் இஸ்ரோ குழப்பத்திலிருந்தது.அதே சமயம் லேண்டருடன் தொடர்பை இழந்தாலும் ஆர்பிட்டர் இன்னமும் இஸ்ரோ உடன் தொடர்பில்தான் இருக்கிறது. இந்த ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவை ஆராயும். இந்த ஆர்பிட்டர் மூலம் விக்ரம் உடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள இஸ்ரோ தீவிரமாக முயன்று வருகிறது. ஆர்பிட்டர் நிலவின் தென் பகுதியைத்தான் சுற்றி வருகிறது.

இந்த ஆர்பிட்டரை வைத்து சந்திரயானை கண்டுபிடிக்க முடிவு செய்தனர். அதன்படியே நேற்று காலை சந்திரயான் 2 இல் இருக்கும் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்து இருக்கிறார்கள். ஆம் நிலவிற்கு மேல் சுற்றும் சந்திரயான் 2 ஆர்பிட்டர் இந்த விக்ரமை மேலே இருந்து படம் பிடித்து, கண்டுபிடித்துள்ளது.இதற்காக தெர்மல் இமேஜ் கேமராவை பயன்படுத்தி உள்ளனர். ஆர்பிட்டரில் தெர்மல் இமேஜிங் கேமராக்கள் இருக்கிறது. இது இருள், அதிக வெளிச்சம் என அனைத்து சூழ்நிலையிலும் படம் பிடிக்க கூடியவை. உலகில் இருக்கும் எல்லாப் பொருட்களும் குறிப்பிட்ட அளவு ஒளியை வெளியே விடும். அந்த ஒளியின் மூலம்தான் நாம் அதை பார்க்கக் முடிகிறது. இந்த தெர்மல் இமேஜிங் கமராக்கள் அந்த ஒளியை படம் பிடிக்கும்.

நிலவில் விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதியில் இருந்து வித்தியாசமான ஒளி வெளியே வரும். இந்த வித்தியாசமான ஒளிகளை மொத்தமாக சேர்த்து இணைத்து பின் ஒரு இமேஜ் உருவாக்கப்படும். அது உண்மையான பொருளின் வடிவத்தை 99% ஒட்டி இருக்கும். இந்த முறையை வைத்துதான் விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.உதாரணமாக தீவிரவாத அமைப்புகளை தாக்கும் முன், அந்த குறிப்பிட்ட இடத்தில் எத்தனை தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்பதை இராணுவ வீரர்கள் தெர்மல் இமேஜிங் கேமராக்கள் மூலம் கண்டுபிடிப்பார்கள். சட்டிலைட் அல்லது டிரோன் உதவியுடன் இது கண்டுபிடிக்கப்படும்.தற்போது அதே முறையை பயன்படுத்தி, தெர்மல் இமேஜிங் கேமராக்களை வைத்து சந்திரயான் 2ன் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளனர். இந்த இமேஜ் விரைவில் வெளியிடப்படும். அதன்பின் விக்ரம் லேண்டரின் உண்மையான நிலை வெளியே தெரிய வரும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்