உலகிலேயே இப்படி ஒரு அதிசயம் நடக்கும் இடம் இதுதான்…..காணத் தவறாதீர்கள்….

ரஷ்ய நாட்டில் உள்ள ஒய்மயகோன் என்ற பகுதி உலகிலேயே மிகவும் அதிகம் குளிரான பகுதியாகும். இந்த பகுதியில் டிகிரி எப்போதும் மைனஸில் தான் இருக்கும். அதிகபட்சமாக மைனஸ் 71.2 டிகிரி அளவில் குளிர் இருக்கும். இந்த பகுதியில் யூன், யூலை போன்ற மாதங்கள் கோடை காலமாக கருதப்படுகிறது.இந்தக் கிராமத்தில் ஒரு வெந்நீர் ஊற்று ( Thermal Spring) இருக்கிறது.நாடோடிகளாக சுற்றிக் கொண்டிருக்கும் அந்த மேய்ப்பர்களைக் கட்டுப்படுத்தி, அரசின் ஆளுகைக்குள் கொண்டுவர வேண்டும் என்றால் அவர்களை முதலில் ஒரு இடத்தில் குடியமர்த்த வேண்டும் என்று நினைத்தது அன்றைய சோவியத் அரசு. அதன் அடிப்படையில்தான் இந்தக் கிராமம் உருவாக்கப்பட்டது.இந்த ஒய்மயகோன் பகுதியில் டிசம்பர் மாதம் ஒருநாள் பகல் பொழுது மூன்று மணி நேரம் தான். கோடை காலங்களில் 21 மணி நேரமாக உள்ளது.இந்த பகுதியில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு கடும் குளிர் காரணாமாக விவசாயம் எதுவும் நடைபெறுவதில்லை. ஆகையால் இவர்களது உணவு மான், குதிரை, போன்ற இறைச்சி வகைகள்தான்.பதப்படுத்தப்பட்ட இறைச்சி உள்ளிட்ட பொருட்களை விற்பதற்கு என்றே அந்த பகுதியில் ஒரே ஒரு கடை செயல்பட்டு வருகின்றது.இந்த பகுதி மக்களின் பிரதான தொழில் மீன் பிடிப்பதும், மிருகங்களை வேட்டையாடுவது தான்.இந்த கிராமத்தில் ஒரே ஒரு கடை மட்டுமே உள்ளது. இங்குள்ள மக்கள் அதிகளவில் பால் குடிப்பதால் இவர்களுக்கு ஊட்டச்சத்து பிரச்சனை ஏற்ப்படுவதில்லை.இறந்தவர்களைப் புதைப்பதற்குத்தான்…. ஒருவர் இறந்துவிட்டால், அவரைப் புதைக்க, குழி தோண்டுவதற்கு குறைந்தது மூன்று நாள்கள் தேவைப்படும்.பனியால் இறுகியிருக்கும் அந்த நிலத்தில் கரி போட்டு நெருப்பு மூட்டி, நெகிழச் செய்து, கொஞ்சம், கொஞ்சமாகக் குழியைத் தோண்டுகிறார்கள்.இந்தக் கிராமத்தின் புகைப்படங்கள் இதுவரை பெரியளவில் வெளிவந்தது கிடையாது.ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னர் இதைப் பற்றிக் கேள்விப்பட்ட நியூசிலாந்து புகைப்படக்காரர் அமோஸ் சாப்பல் ( Amos Chapple)) என்பவர் இந்த மக்களின் வாழ்வை புகைப்படத் தொகுப்பாக்கியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்