என்டர்பிறைஸ் சிறிலங்கா தேசியக் கண்காட்சியை ஆரம்பித்து வைக்க யாழிலிற்கு ரயிலில் வந்த அமைச்சர்..!!

அமைச்சர் மங்கள சமரவீர புகையிரதத்தில் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்துள்ளார். என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசிய கண்காட்சி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இந்தக் கண்காட்சி இடம்பெறவுள்ள நிலையில் இன்றைய தினம் இடம்பெறும் ஆரம்ப நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொள்ளவுள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே, பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நிதி அமைச்சர் அமைச்சர் மங்கள சமரவீர நேற்றைய தினம் யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளார்.இதன்போது, யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்