கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள இலங்கை வந்த நியூஸிலாந்து அணிக்கு ஏற்பட்ட பரிதாபம்..!

கிரிக்கெட் சுற்றுத்தொடருக்காக இலங்கை வந்த நியூசிலாந்து அணி பல்லேகல மைதானம் நோக்கி செல்லும் போது சிரமம் ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ளது.அவர்கள் பயணித்த பேருந்து ஒன்று திடீரென தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளது.இலங்கை அணியுடனான டெஸ்ட் போட்டி வெற்றிக்கு பின்னர், கண்டி நோக்கிச்  செல்லும் போது அவர்கள் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.பேருந்து, மலைப்பகுதி பிரதேசத்தில் தொழில்நுட்ப கோளாறிற்குள்ளாகியுள்ளது. நடுவீதியில் பயணிக்க முடியாமல் தடுமாறியுள்ளனர்.இதன் போது, அவ்வழியாக வந்த அம்பியுலன்ஸ் மற்றும் சிறிய வேன் ஒன்றின் உதவியுடன் நியூசிலாந்து அணியினர் கண்டி நோக்கிச் சென்றுள்ளனர்.இதனால், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான காணொளி ஒன்றை, தங்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்