ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய நாட்டு மக்களுக்கு இன்று வழங்கிய உறுதி மொழி…!!

மலையக மக்களின் வீடு, கல்வி,தொழில் ஆகிய அத்தியாவசிய தேவைகளில் தற்போதும் நிலவும் பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்திற்குள் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.பொதுஜன பெரமுனவின் இளைஞர் முன்னணியின் தேசிய மாநாடு இன்று கொழும்பில் உள்ள தாமரை தடாக அரங்கில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.மலையகத்தை சிறந்த சுற்றுலா வலயமாக மேம்படுத்த வேண்டுமாயின் முதலில் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றமடைய வேண்டும் எனவும் கோத்தபாய ராஜபக்ச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்