அன்பான, புலம்பெயர் உறவுகளுக்கு ஒர் அன்பான வேண்டுகோள்…

அன்பு உறவுகளே… தாயகத்தில் போரினால் நேரிடியாக பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகள் ஏராளம் என்பதை நீங்கள் அறிவீர்கள்…!இந்த குழந்தைகளின் எதிர்காலத்திற்காக அவர்களை சிறுவர் இல்லங்களை உருவாக்கி அவர்களுக்கு உணவு உடை உறையும் என்பவற்றை வழங்கி அவர்களின் சந்தோஷமான ஒளிமயமான வாழ்விற்காக தினமும் உழைத்து வருகின்றோம்…

அன்பார்ந்த உறவுகளே .. உங்கள் இல்லங்களில் இடம்பெறும் சுப காரியங்களின் போது இந்த பிள்ளைகளையும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.. உங்கள் மங்கல நிகழ்வுகளை அவர்களுடன் இணைந்து கொண்டாடி அவர்களின் மகிழ்ச்சியில் நீங்களும் பங்காளிகள் ஆகுங்கள்…அன்பான புலம்பெயர் தமிழ் உறவுகளே… உங்கள் திருமண நிகழ்வுகள் பிறந்த நாள் நிகழ்வுகளை இந்தக் குழந்தைகளோடு இணைந்து கொண்டாடிடுங்கள் .கீழே உள்ள பதிவு உங்களுக்கும் சிலநேரம் உதவியாக இருக்கும் அதனால் இதைப் பதிவிடுகின்றோம்…

நம் வீட்டில் நிகழும் பிறந்த நாள், திருமணம், திருமண நாள், மற்றும் நினைவு நிகழ்வுகளை இவ்வண்ணம் நீங்கள் வன்னியில் இருக்கும் இக் குழந்தைகளோடு கொண்டாட விரும்பினால், இதோ செலவு மற்றும் மேலதிக தொடர்பு குறித்த விபரங்கள். நீங்கள் நேரடியாகக் கலந்து கொள்ள முடியாத சந்தர்ப்பத்திலும், இவர்களுக்குப் பணம் அனுப்புவதன் மூலம் குறித்த நாள் நிகழ்வை அவர்கள் கொண்டாடுவார்கள். செலவுக்கான ரசீதும் உங்களுக்கு உடனடியாகவே அனுப்பி வைக்கப்படும். இதை உங்கள் உறவினர், நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்.

பாரதி இல்லம்:Bharathi Illam
Putharkuda, 4th Ward ,Mulliyavalai
Mullaitivu
Sri Lanka

தொலைபேசி : 0094 715354501
———————————————————————-

செஞ்சோலை சிறுவர் இல்லம்:
Sencholai Children’s Care Home
4, 5 Stage 2,Thiruvaiyaru, Kilinochi
Sri Lanka

தொலைபேசி: 00 94 715 354 504

———————————————————————–

அன்பு இல்லம்
Anpu Illam Children’s Home
Muthuvinayagapuram
Oddisuddan, Mullaitivu
Sri Lanka

தொலைபேசி:  00 94 715 535 4502

குறிப்பு: இந்த இல்லங்கள் தவிர இன்னும் தம் தாய், தந்தை, உள்ளிட்ட உறவுகளை இறுதிப் போரில் இழந்து விட்ட ஏராளம் குழந்தைகள் வேறு இல்லங்களிலும் உள்ளனர்.வாய்ப்புக் கிடைப்பின் இது போன்ற இல்லங்களுக்கு நீங்கள் நேரடியாகச் சென்று பார்க்க வேண்டும்.

வருடத்தின் ஏதாவது ஒரு கொண்டாட்டத்தை இந்த உறவுகளுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்பதே நம் எல்லோரினதும் அவாவுமாகும்.கருணை உள்ளம் படைத்த நெஞ்சங்களே…. தயவு கூர்ந்து எம் தேசத்து சிறார்களின் வாழ்வு சிறக்க உதவுங்கள்…
இந்த சிறார்களின் அன்பான வாழ்த்து உங்களை என்றென்றும், வையத்துள் வாழ்வாங்கு வாழ வைக்கும்….

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்