மலையகத்தில் திடீர் மண் சரிவு….பரிதாபமாக பலியான இரு பிள்ளைகளின் தந்தை..!

நானுஓயா நகரத்தை அண்மித்த பகுதியில் வீட்டிற்கு முன்பாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த அனர்த்தம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் அந்த நபர் வேலை செய்து கொண்டிருந்ததாக தெரியவருகின்றது. சம்பவத்தில் நானுஓயா பகுதியை சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 33 வயதுடைய மூர்த்தி இராஜேந்திரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.  மரண விசாரணைகளின் பின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்