சற்று முன் ஏ-9 வீதியில் கோர விபத்து….படுகாயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பிய நபர்கள்..!

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.ஏ9 வீதியூடாக யாழ். நோக்கி பயணித்துக் கொண்டிருந்த காரை திடீரென சாரதி நிறுத்தியுள்ளார்.இதனால் காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த மோட்டார்சைக்கிள் காருடன் மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே காயமடைந்த நிலையில், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்