யாழில் பிரபல தென்னிந்திய நடிகை…! நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவிலில் விசேட தரிசனம்..!!

பிரபல நடிகை சுகன்யா யாழ்.குடாநாட்டுக்கு வருகைதந்து நயினை நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளை நடாத்தியிருக்கின்றனர்.1990களில் வெளியான திரைப்படங்களில் நடித்து பிரபல்யமான நடிகையாக திகழ்ந்தவர் சுகன்யா அத்தோடு தொப்புளில் பம்பரம் விடும் காட்சியால் பல ரசிகர்களையும்ட கவர்ந்தவர்.நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயில் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டத்தில், நயினாதீவில் உள்ள ஒரு புகழ் பெற்ற இந்துக் கோயில் ஆகும். மேலும் இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும், தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது.

இக்கோயிலின் திருவிழாக் காலங்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திரள் திரளாக வந்து கூடி நாகபூஷணி அம்மனின் திருவருளை பெற்று வருகின்றனர். கோயிலில் பகல் மற்றும் இரவு நேரத்தில் அன்னதானம் கொடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்