பூமியின் கட்டமைப்புகளை முப்பரிமாணத்தில் ஒளிரச் செய்து சாதனை படைத்த மாணவன்.!

கனடாவைச் சேர்ந்த மாணவர் ஒருவரின் சாதனை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பூமியின் வரைபடத்தில் உள்ள உட்கட்டமைப்புக்களை ஒளிரும் முப்பரிமாணத் தொழில்நுட்பம் மூலம் மாணவர் ஒருவர் வகைப்படுத்திக் காட்டி பாராட்டுக்களை பெற்று வருகிறார்.நோவா ஸ்காடியாவை சேர்ந்தவர் 23 வயதான பீட்டர் அட்வு என்ற இளைஞர் கட்டிடக் கலைக் கல்வியை தொடர்ந்து வருகிறார்.உலகின் எல்லைகளைப் பிரிக்க பல வரைபடங்கள் இருந்தாலும், டிஜிட்டல் முறையில் ஒவ்வொரு உள்கட்டமைப்பையும் தனித் தனியே பிரித்துக் காட்சிப்படுத்தியுள்ளார்.இத்தகவல்களை பல்வேறு நாட்டு அரசுகளிடம் இருந்து பெற்றதாகக் கூறியுள்ள அவர், உலகின் முக்கிய நகரங்கள், வீதிகள், ரயில் இருப்புப் பாதைகள், துறைமுகங்கள், மற்றும் விமான நிலையங்களின் கட்டமைப்புக்கள் உள்ள இடங்களை தனித்தனி நிறங்களில் ஒளிரவிட்டு காண்பித்துள்ளார்.மாணவரின் இந்த முயற்சிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்