சந்திராயன்- 2 ஏவப்படும் போது துல்லியமாக புகைப்படம் எடுத்த புகைப்படக் கலைஞருக்கு விருது வழங்கி கௌரவித்த நாஸா..!

சந்தியராயன்-2 விண்கலன் வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்ட போது புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞருக்கு நாசா விருது வழங்கியுள்ளது.சந்திராயன்-2 விண்கலன் பல்வேறு தடைகளுக்கு பிறகு வெற்றிரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. ஜூலை 22 ஆம் திகதி மதியம் சந்திராயன்-2 விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தன.இந்நிலையில், ஜி.எஸ்.எல்.வி. ரொக்கெட் மூலம் விண்ணை நோக்கி புறப்பட்ட சந்திராயன் – 2 விண்கலம், மேகக்கூட்டத்தை கிழித்துக்கொண்டு வான்பரப்பை விட்டு வளிமண்டலத்திற்குள் நுழைந்தது.இந்த இறுதி நிமிட நிகழ்வை, இந்தியாவில் பலர் புகைப்படம் எடுத்திருந்தாலும், சென்னையை சேர்ந்த நீரஜ் லாடியாவின் புகைப்படத்திற்கு அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா, இன்றைய நாளின் வானியல் புகைப்படம் என்ற பெயரில் விருது வழங்கி அதற்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்