36 காந்த உருண்டைகளை விழுங்கிய ஒரு வயதுக் குழந்தை…! குடலில் மாலையாக கோர்த்துக்கொண்ட அவலம்..!

சீனாவில் ஸெஜியாங் மாகாணத்தில் ஒரு வயது குழந்தையொன்று காந்த உருண்டைகளை விழுங்கியுள்ளது. அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து குடலில் மாலைபோல ஒட்டிக் கொண்டதால் அக் குழந்தைக்கு குடலில் துவாரங்கள் ஏற்பட்டுள்ளன.இக் குழந்தைக்கு தொடர்ச்சியாக வாந்தியும், காய்ச்சலும் ஏற்பட்டதை அடுத்து பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அங்கு எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது, குழந்தையின் வயிற்றில் மால போன்ற உருவம் வட்டவடிவில் இருந்ததைக் கண்டு பிடித்துள்ளனர். உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு அதனை அப்புறப்படுத்தியுள்ளனர்.குழந்தை, பெற்றோருக்குத் தெரியாமல் 36 காந்த உருண்டைகளை ஒவ்வொன்றாக விழுங்கியதாகவும், குடலின் வடிவமைப்பில் அருகருகே இருந்த காந்த உருண்டைகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து ஒட்டிக்கொண்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், காந்த ஈர்ப்பு சக்தியால் காந்தங்கள் ஒட்டிக்கொண்ட இடங்களில் இருந்த குடலில் திசு அரிப்பு ஏற்பட்டு துவாரங்கள் விழுந்ததாகவும், பித்த நீர் சுரப்பு ஏற்பட்டு உடல்நலம் குன்றியதாகவும் வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்