55 வருடங்களின் பின் பாகிஸ்தான் செல்லும் இந்திய அணி.!!

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள டேவிஸ் கிண்ண டென்னிஸ் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி பாகிஸ்தான் செல்லவிருக்கின்றன.55 வருடங்களுக்கு பின்னர் இவ்வாறு இந்திய அணி பாகிஸ்தானிற்கு செல்லவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பயங்கரவாத தாக்குதல்கள் உட்பட பல்வேறு பிரச்சினைகளின் எதிரொலியாக இரு நாடுகள் இடையே பதற்றம் நிலவி வருகிறது.இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான டேவிஸ் கிண்ண போட்டி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அறிவித்திருந்தது.பதற்றம் காரணமாக இந்திய அணி அங்கு சென்று விளையாடுமா என கேள்வி பலர் மத்தியிலும் காணப்பட்டது.

இந்நிலையில், எதிர்வரும் செப்டம்பர் 14, 15 திகதிகளில் இஸ்லாமாபாதில் நடைபெறவுள்ள டேவிஸ் கிண்ண போட்டியில் இந்திய அணி பங்கேற்கும் என இந்திய டென்னிஸ் அணியினர் தெரிவித்துள்ளனர்.இறுதியாக கடந்த 1964 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்ற டேவிஸ் கிண்ண போட்டியில் இந்தியா 4-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்