இலங்கை நிர்வாக சேவையில் தரம் 111 இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2018 (2019)

பொது நிருவாக அனர்த்த முகாமைத்துவ மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சு

இலங்கை நிர்வாக சேவையில் தரம் 111 இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2018 (2019)

இலங்கை நிர்வாக சேவையின் தரம் 111 இல் உள்ள பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்காகத் தகுதிபெற்ற இலங்கைப் பிரசைகளிடமிருந்து விண்ணப்பங்கள் இத்தால் கோரப்படுகின்றன.இப்பரீட்சை அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் விதிக்கப்படும் விதி ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டு பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் 2019 நவம்பர் மாதம் கொழும்பு மாவட்டத்தில் நடாத்தப்படவுள்ளது. இப்பரீட்சையை ஒத்திவைக்க அல்லது இரத்துச் செய்வதற்கு அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்களுக்கு உட்பட்டவகையில் செயலாளருக்கு அதிகாரமுண்டு.

இவ்வறிவித்தலின் ”செயலாளர்”” எனும் பதம் ”பொது நிருவாக அமைச்சின் விடயப் பொறுப்பு செயலாளர்”” எனப் பொருள்படும். ”சேவை”” என்ற பதம் வேறு எந்த விதத்திலும் விசேடமாகக் குறிப்பிடப்படாத சந்தர்ப்பத்தில்
”இலங்கை நிருவாக சேவை”” எனப் பொருள்படும்.இப்பரீட்சை மூலம் இலங்கை நிர்வாக சேவையின் தரம் 111 இற்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படும்.விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 2019.08.19 ஆம் திகதியாகும்.

குறிப்பு.- விண்ணப்பப்படிவம் அல்லது அதனுடன் தொடர்பான கடிதம் தபாலின்போது தொலைந்த அல்லது தாமதமடைந்ததாகக் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் பற்றி கவனத்திற் கொள்ளப்படுவதில்லை.இறுதித் திகதி வரை விண்ணப்பங்களைத் தாமதப்படுத்தலினால் ஏற்படும் நட்டங்களை விண்ணப்பதாரியே பொறுப்பேற்றுக்கொள்ளல் வேண்டும்.எழுத்துப் பரீட்சை.- இப்பரீட்சை பின்வரும் ஐந்து (5) வினாப்பத்திரங்களைக் கொண்டமைந்திருக்கும் :

(i) பொது விவேகம்
(ii) இலங்கையின் சமூக, பொருளாதார அரசியல் பின்னணியூம் போக்குகளும்
(iii) உலகளாவிய போக்குகள்
(iஎ) முகாமைத்துவ உளச்சார்பு
(எ) ஆக்கபூவமான, பகுப்பாய்வூ ரீதியான மற்றும் தொடர்பாடல் திறன்கள்

நேர்முகப் பரீட்சை.- எழுத்துப் பரீட்சையில் எல்லா வினாத்தாள்களுக்கும் தோற்றிய பரீட்சார்த்திகளுக்கிடையில் போதுமானதென அரசாங்க சேவை ஆணைக்குழுவினால் விதிக்கப்படும் ஆகக்கூடிய மொத்தப் புள்ளிகளைப் பெறுகின்ற பரீட்சார்த்திகளுக்காக பொது மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை நடாத்தப்படும். அந்நேர்முகப் பரீட்சை நடாத்தப்படும் திகதியை அரசாங்க சேவை ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய செயலாளர் தீர்மானிப்பார்.நியமிக்கப்படவூள்ள ஆட்களின் எண்ணிக்கை 203 ஆகும். வெற்றிட எண்ணிக்கைக்கு மேல், இறுதி வெற்றிடம் அல்லது இறுதியான சில வெற்றிடங்களுக்காக சமமான புள்ளிகளைப் பெற்றுள்ள பரீட்சார்த்திகள்
காணப்படும் நிலைமைகளில் அத்தகைய வெற்றிடங்களை நிரப்புவதற்கான தீர்மானமானது நடைமுறை விதிகளின் பிரிவு 80 இற்கமைய அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் மூலம் எடுக்கப்படும். நியமனம் நடைமுறைக்கு வரும் திகதியானது அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் பணிப்பின் பேரில் நிர்ணயிக்கப்படும்.

5. மாதாந்த சம்பள அளவூத்திட்டம்.- 03/ 2016 ஆம் இலக்க 2016.02.25 ஆம் திகதிய அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கையின் உப அட்டவணை 1 படி இப்பதவிக்கு உரித்துடைய மாதாந்த சம்பள அளவூத்திட்டம் ரூபா 47,615-
10 x 1335 – 8 x 1630 – 17 x 2170 – ரூபா 110895 (SL-1-2016).

இச்சம்பளம் குறித்த சுற்றறிக்கையின் உப அட்டவணை 11 இன் சட்டதிட்டங்களின் படியே வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக அரசாங்க அலுவலர்களுக்கு
அரசினால் காலத்துக்குக்காலம் வழங்கப்படும் வேறு படிகளும் உங்களுக்கு உரித்தாகும்.  ஆட்சேர்ப்புச் செய்வதற்கான தகைமைகள் :

(அ) (i) இலங்கைப் பிரசையொருவராக இருத்தல்
(ii) சிறந்த நடத்தையூடையவராக இருத்தல்
(iii) நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பணிபுரிவதற்குப் போதிய உடல் மற்றும் உளத்தகைமைகளைக் கொண்டிருத்தல்.

(ஆ) கல்வித் தகைமைகள். – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பட்டத்தினை வழங்கும் நிறுவனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிறுவனமொன்றினால் வழங்கப்படும் பட்டம் ஒன்றினைப் பெற்றிருத்தல்.குறிப்பு.- முதற் பட்டமொன்று அல்லது பட்டப்பின் பட்டத்தைப் பெற்றுள்ள விண்ணப்பதாரிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். ஆட்சேர்ப்புக்காக அடிப்படைத் தகைமையாக ஏற்றுக்கொள்ளப்படும் பட்டப்பின் பட்டத்தகைமை தரமுயர்வுகளுக்கு மாதிரியாகக் கொள்ளப்படக்கூடாது.

வயது.- விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதிக்கு இருபத்திரண்டு (22) வயதிற்கு குறையாதிருப்பதோடு முப்பது (30) வயதினை அடையாதவராக இருத்தல் வேண்டும்.அதற்கிணங்க 1997.08.19 ஆந் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் மற்றும் 1989.08.19 ஆந் திகதியன்று அல்லது அதற்கு பின்னரான பிறப்புத் திகதியூடையவர்களுக்கு மாத்திரம் விண்ணப்பிக்க தகைமை காணப்படுகின்றது.

(ஈ) தகைமைகள் பற்றிய வரையறைகள் :
(i) திறந்த போட்டிப் பரீட்சையில் இரு (02) தடவைகளுக்கு மேல் தோற்றுவதற்கு எந்தவொரு விண்ணப்பதாரிக்கும் அனுமதியளிக்கப்படமாட்டாது. (2013.12.23 ஆந் திகதிக்கு முன்னைய சேவைப் பிரமாணக் குறிப்பின்கீழ் இலங்கை நிர்வாக சேவையின் தரம் 111 இற்கு ஆட் சேர்ப்புச் செய்வதற்கான பரீட்சைகளில் அமர்வுகளின் எண்ணிக்கையானது கருத்திற்கொள்ளப்படுவதில்லை.)

மேலதிக தகவல்கள் மற்றும் மாதிரி விண்ணப்ப படிவம்

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்