திரைப்படமாகும் சுழல் பந்து ஜாம்பவான் முரளிதரனின் வாழ்க்கை வரலாறு…!! படப்பிடிப்புகள் நாளை ஆரம்பம்..!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜம்பவான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமாகவுள்ளது.முரளிதரனின் அடையாளமாக திகழும் ‘800’ என்ற பெயரிலேயே அவரது வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளது.அத்துடன், குறித்த திரைப்படத்தில் முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து மற்றும் பல நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் நாளை(செவ்வாய்கிழமை) வெளியிடப்படவுள்ளதாக முரளிதரன் தெரிவித்தார்.1992ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகில் அறிமுகமாகிய முத்தையா முரளிதரன் கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக இடம்பெற்ற ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார்.தனது 19 வருடகால கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருநாள் அரங்கில் 534 விக்கெட்டுக்களையும், டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுக்களையும் முரளிதரன் கைப்பற்றியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்