திருமண வீட்டில் அசம்பாவிதம்…குழந்தைகள் உட்பட 24 பேர் வைத்தியசாலையில்..!!

திருமண வீட்டில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 24 பேர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சம்பவம் ஒன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.திருகோணமலை புல்மோட்டைப் பகுதியிலேயே உணவு ஒவ்வாமை காரணமாக இவர்கள் புல்மோட்டை தள வைத்தியசாலையில் இன்று சேர்க்கப்பட்டனர்.வயிற்றுளைவு, வயிற்றோட்டம் மற்றும், வாந்தி என்பன காரணமாக அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.புல்மோட்டை தக்வா நகர் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மதியம் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில், உணவு உட்கொண்டவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்களில் சிறுவர்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்