க.பொ.த உயர்தரம் , தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கு தோற்றும் மாணவர்களுக்கான மிக முக்கியமான அறிவிப்பு.!

க.பொ.த உயர் தரப் பரீட்சை, ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறும் திகதி மற்றும் அந்த பரீட்சைகள் தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் தடைசெய்யப்படவுள்ள திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதற்கான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.இதன்படி, எதிர்வரும் 4ம் திகதி ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளதாகவும், எதிர்வரும் ஆகஸ்ட் 5ம் திகதி முதல் 31ம் திகதி வரை உயர் தர பரீட்சைகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில், இம்முறை உயர் தர பரீட்சைக்கு 337,704 மாணவர்கள் தோற்றவுள்ளதுடன், இதற்கான 2678 பரீட்சை நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு 339,369 மாணவர்கள் தோற்றவுள்ளனர். 255,529 சிங்கள மொழி மாணவர்களும், 83,840 தமிழ் மொழி மாணவர்களும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இதற்காக 2995 பரீட்சை மத்திய நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.இதேவேளை, கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான கருத்தரங்குகள் , மேலதிக வகுப்புகள் நடத்துவதை எதிர்வரு் 30 திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளது. அத்தோடு தரம் 5 ஆம் புலமைப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் நடத்துவதற்கும் எதிர்வரும் 31 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடைசெய்யப்படவுள்ளதாகவும், பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்