ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரட்டைச் சகோதரிகள்…இலங்கையை உலுப்பிய பெரும் சோகம்…கதறியழும் உறவுகள்..!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்ட மற்றுமொரு சிறுமியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.அக்கரபத்தனை – டொரிங்டனில் ஆற்றுவெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட இரட்டை சகோதரிகளில் ஒருவரின் சடலம் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டொரிங்டன் பாடசாலையில் தரம் 07 கல்வி கற்கும் 12 வயதுடைய இரட்டை சகோதரிகளான மதியழகன் லெட்சுமி, மதியழகன் சங்கீதா ஆகிய மாணவிகளே இவ்வாறு உயிரிழந்தனர்.பாடசாலை விட்டு வீட்டுக்கு செல்லும் வழியில், வெள்ளநீரில் இழுத்துச் செல்லப்பட்டனர்.மலையகத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை டொரிங்டன் தமிழ் வித்தியாலயத்தின் கற்பித்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது .

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்