ரயில் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி… வடக்கு மார்க்கத்தில் இனி அதிவேகப் பயணம்..!!

115 வருட கால பழைய மஹவ – ஓமந்தை புகையிரத பாதை முழுமையாக புனரமைக்கப்பட்ட நிலையில், தற்போது பாவனையில் உள்ள புகையிரத பாதையை மூடும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.குறித்த நிகழ்வு வியாழக்கிழமை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.வடக்கு புகையிரத சேவையில் மஹவ – ஓமந்தை இடையிலான புகையிரத பாதை 133 கிலோ மீற்றராகும். மஹவ தொடக்கம் அநுராதபுரம் வரையிலான புகையிரதப்பாதை 1904ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.அநுராதபுரம் தொடக்கம் ஓமந்தை வரையிலான புகையிரதப்பாதை 1905ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டது.அன்றிலிருந்து இன்று வரை இந்த புகையிரதப்பாதைகள் எதுவும் சிறிதளவேனும் புனரமைக்கப்படவில்லை.இதனால், ஓமந்தை வரையில் புகையிரத சேவைகள் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்திலேயே பயணிக்கிறது.குறுகிய தூரத்தைக் கொண்ட இந்த பிரதேசத்தில் புகையிரத சேவை பயன்பாட்டுக்கு மாத்திரம் 3 மணித்தியாலங்கள் எடுக்கிறது.இதனால் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கிறார்கள். புதிய தொழிநுட்பங்களை உள்ளடக்கி மதவாச்சி மற்றும் வவுனியா வரை கண்டி – யாழ்ப்பாணம் புகையிரத சேவைகள் தற்போது காணப்படுவதை காட்டிலும் நவீனப்படுத்தப்படும்.புதிய புகையிரதப்பாதையில் ஒரு மணித்தியாலத்திற்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் பயணம் செய்ய முடியும். மூன்று வருட காலத்திற்குள் இந்த செயற்திட்டம் முழுமைபடுத்தப்படும்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்