நீண்ட காலம் சிறையில் வாடும் ஏழு தமிழர்கள்..!! நளினியின் மனு உச்சநீதிமன்றினால் தள்ளுபடி..!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பில் சென்னை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிட கோரி நளினியால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.அத்துடன், அமைச்சரவை தீர்மானம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்படி நீதிமன்றம் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என இதன்போது நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு தமிழர்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகின்றனர்.இவர்களை விடுவிப்பதற்கு பரிந்துரை செய்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிகாரம் தமிழக ஆளுநருக்கு வழங்கப்பட்ட நிலையிலும் இது குறித்து எந்தவொரு முடிவும் எட்டப்படாத நிலையே இருந்து வருகிறது.கடந்த 2018ஆம் ஆண்டு அனுப்பி வைக்கப்பட்ட இந்த தீர்மானம் தொடர்பில் ஆளுநர் இன்னும் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.இந்த நிலையிலேயே, ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றில் நளினி மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்