இலங்கை- இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி… பயிற்சியாளராக வருகிறார் ஜாம்பவான் மஹேல..!!

இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இலங்கை ஜாம்பவான் ஜெயவர்தனே அதற்கு விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தாலும், அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்பே இல்லை எனத் தெரிகிறது.இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு பலத்த போட்டி இருக்கும்.அதற்கு இந்திய கிரிக்கெட்டில் வழங்கப்படும் அதிக சம்பளமும் ஒரு காரணம், இதற்கு பலரும் விண்ணப்பம் செய்தாலும், அதில் முக்கிய பெயர்களாக டாம் மூடி, கேரி கிர்ஸ்டன், சேவாக் மற்றும் ஜெயவர்தனே ஆகியோரை குறிப்பிடுகிறார்கள்.இவர்களில் ஜெயவர்தனே இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தால், அதன் பின்னணியில் நிச்சயம் ரோஹித் சர்மா இருப்பார். ரோஹித் சர்மா தலைவராக இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஜெயவர்தனே பயிற்சியாளராக இருக்கிறார்.விராட் கோஹ்லியை ஒருநாள் போட்டி தலைவர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ரோகித் சர்மாவுக்கு அந்த பொறுப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.ஏற்கனவே, கோஹ்லிக்கு ஏற்ற பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருந்தது போல, ரோஹித் சர்மா தலைவராக நியமிக்கப்பட்டால் அவருக்கு ஏற்ற ஜெயவர்தனே அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.எது எப்படியோ, ஜெயவர்தனே இந்திய தலைமை பயிற்சியாளராக ஆகலாம் என வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்