13ம் நூற்றாண்டைச் சேர்ந்த புராதன பிள்ளையார் ஆலயம் மன்னாரில் கண்டுபிடிப்பு…!!

மன்னார் மாவட்டத்தின் குருந்தன் குளப்பகுதியில் நேற்று முன் தினம் (16.07.2019) யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தலைமையில் உதவி விரிவுரையாளர், மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வில் கி.பி.13 நூற்றாண்டுக்குரிய அழிபாடுகளுடன் கூடிய இந்து ஆலயம் கண்டுபிடிக்கப்பட்டது.இவ்வாலயம் அமைந்துள்ள பிரதேச பற்றியும் அவ்விடத்தின் முக்கியத்துவம் பற்றியும் பாளி,சிங்கள, இலக்கியத்தில் வரும் ‘குருந்தி’ என்ற இடமே இதுவாக இருக்கலாம் என பேராசிரியரால் கூறப்பட்டது ‘சாவகனுக்கும்’ இவ்விடத்திற்கு தொடர்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.சுதை மற்றும் செங்கற்களால் ஆன இவ்வாலயத்தில் கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், அந்தராளம், பலிபீடம், ஆகியனவும் சுவர்களில் தூண்களும் காணப்படுகின்றன.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்