திருமணத்தில் பங்கேற்றவர்களிடம் உணவுக்கு பணம் வசூலித்த விசித்திரத் தம்பதி…!! வெடித்தது பெரும் சர்ச்சை!

வெளிநாடு ஒன்றில் புதுமண தம்பதி ஒன்று தங்கள் திருமண விழாவில் கலந்துகொள்ள வந்தவர்களிடம் விருந்துக்கான பணத்தை வசூலித்தது தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குறித்த திருமணத்தில் கலந்துகொண்ட பெண் ஒருவர் தமது பேஸ்புக் பக்கத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.குறித்த சம்பவத்தை வாசித்த பலரும், திருமண விழாவுக்கான செலவை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் ஏன் விருந்தினர்களை அழைத்து திருமணம் செய்து கொள்ள வேண்டும்? ஆடம்பர விழா தேவையா? ஏன் நீங்கள் அரசு சார்பில் உள்ள அரங்கத்தில் திருமணம் செய்துகொள்ள கூடாது?விருந்தினர்களை அவர்களின் உணவுக்கு பணம் செலுத்த கோருவது அவர்களை அவமானப் படுத்தும் செயல் அல்லவா என பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.ஒருவர், இதுபோன்று எனது சொந்த சகோதரி அவரது திருமண விருந்துக்கு பணம் செலுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக அந்த விழாவை புறக்கணிப்பேன் என கூறியுள்ளார்.இன்னொருவர், உங்களால் எத்தனை விருந்தினர்களுக்கு உணவு வழங்க முடியுமோ அந்த எண்ணிக்கையிலான விருந்தினர்களை மட்டும் அழைத்துக் கொள்ளுங்கள் என காட்டமாக பேசியுள்ளார். ஒரு பெண்மணி, சரி, எனது உணவுக்கான பணத்தை நான் அளிக்க விரும்புகிறேன். ஆனால், ஏன் கறாராக 50 டொலர் வசூலிக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.ஒருவர், பரிசு பொருட்கள் கட்டாயமல்ல என்றால் உணவுக்கு தனியாக பணம் தருவதில் தவறில்லை என குறிப்பிட்டுள்ளார்.இந்த தகவலை பகிர்ந்து கொண்ட பெண்மணி, அந்த திருமண தம்பதிகளின் புகைப்படத்தையும் தமது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். அந்த தம்பதிகளுக்கு தங்கள் திருமணத்தை ஆடம்பரமாக கொண்டாட வசதி இல்லை எனவும்,இதனால் 40 விருந்தினர்களை மட்டுமே தங்களின் திருமணத்திற்கு அவர்கள் அழைத்துள்ளனர்.மட்டுமின்றி, திருமணத்திற்கு வருபவர்கள் விருந்தில் கலந்துகொள்ள 50 டொலர் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர். இந்த கட்டணம் வசூலிக்கும் திட்டமே விருந்தினர்களை ஆத்திரம் கொள்ள வைத்துள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்