அண்டவெளியில் நாளை இரவு நிகழப் போகும் இன்னுமொரு அதிசயம்…! காண்பதற்கு தயாராகும் இலங்கையர்கள்…!

அண்டவெளியில் நாளைய தினம் ஏற்படும் சந்திரகிரகணத்தை பார்க்கும் வாய்ப்பு இலங்கை மக்களுக்கும் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கதிரவ ஒளியால் ஏற்படும் புவியின் நிழலிற்குள் நிலவு கடந்து செல்லும் போது நிகழ்வதே நிலவு மறைப்பு அல்லது சந்திர கிரகணம் (lunar eclipse) என்படும். ஒரு முழுநிலவு நாளில் மட்டுமே நிலவு மறைப்பு நிகழ்கிறது.எனவே நாளை நள்ளிரவிற்கு பின்னர்,சந்திர கிரகணம் நாளை மறுநாள் அதிகாலை 12.13 இற்கு சந்திரகிரகணம் ஆரம்பமாகி, அதிகாலை 5.47 அளவில் நிறைவு பெறவுள்ளது.இது கதிரவன், புவி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது மாத்திரமே சாத்தியமாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.நிலவின் இடம் மற்றும் அதன் சுற்றுப்பாதையைப் பொறுத்து நிலவு மறைப்பின் வகையும் அது நீடிக்கும் கால அளவும் வேறுபடும்.இதேவேளை முழுமையான நிலவு மறைப்பின் போது, நிலவின் மீது விழும் கதிரவ ஒளியை புவி முற்றிலும் தடுக்கிறது. அப்போது, கதிரவ வெளிச்சத்தின் மிகச் சிறிய அளவு புவியின் வளிமண்டலம் வழியாக ஒளிவிலகல் அடைந்து நிலவின் மீது படுகிறது.இந்த வருடத்திற்கான இறுதி சந்திரகிரகணம் இது என்பதுடன், 2021 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதியே இலங்கையர்களுக்கு அடுத்த சந்திரகிரகணம் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.இலங்கை, அவுஸ்ரேலியா, ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில நாடுகளில் இவ்வாறு சந்திர கிரகணம் தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்