பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க நாளை யாழ் வருகிறார் பிரதமர் ரணில்…!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் மாலை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நாளை இரவு ஐக்கிய தேசியக் கட்சியினரை அவர் யாழ்ப்பாணத்திலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் வைத்து சந்திக்கவுள்ளார்.அத்துடன் மறுநாள் சுன்னாகம் – கந்தரோடை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராக ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனின் அழைப்பின் பெயரில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த நிகழ்வில் கலந்து கொள்வதுடன், ஐந்தரை கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் கலையரங்கத்துக்கான அடிக்கல்லையும் நாட்டவுள்ளார்.இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொள்வார்கள். மேலும், அன்றைய தினம் காரைநகருக்கும் பிரதமர் செல்கின்றார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்