தலைநகரில் இன்று அதிகாலை நடந்த திடீர் சுற்றி வளைப்பு..!! பெண்கள் உட்பட பலர் அதிரடியாகக் கைது..!

கொழும்பில் பிறந்தநாள் நடைபெற்ற வீடொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 9 பேரை கைது செய்துள்ளனர்.பொரலஸ்கமுவ பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் பிறந்த நாள் விருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.பிறந்த நாள் கொண்டாட்டத்தில் குஷ் மற்றும் ஐஸ் என்ற போதைப்பொருட்களுடன் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இன்று அதிகாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொரலஸ்கமுவ அபேரத்ன மாவத்தையில் அமைந்துள்ள இந்த வீட்டில் இருந்து போதைப்பொருட்கள், மதுபானம், சிகரெட் வகைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இதன்போது 3 பெண்கள் உட்பட 9 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வீட்டின் உரிமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஏனையவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்