இலங்கை கடலில் சற்று முன்னர் நேர்ந்த சோகம்…! கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட குடும்பம்..!!

சிலாபம் கடற்கரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மற்றும் 3 பிள்ளைகள் இன்று கடல் அலையில் சிக்கியுள்ளனர்.தாயும், இரு மகளும் காப்பாற்றப்பட்டு சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எனினும், கடைசி மகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஒரு வயதுடைய குழந்தை ஒன்றே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.தாய் மற்றும் 8 – 12 வயதுடைய இரண்டு மகள் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதேவேளை, கடந்த மாதம் தென்னிலங்கை கடலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.இந்த அனர்த்தத்தில் தகப்பன், தாய் மற்றும் இரு பெண் பிள்ளைகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்