தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் அரசாங்கத்தின் புதிய திட்டம்..!! . வடக்கு கிழக்கில் விரைவில் அமுலுக்கு!

இலங்கையில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் புதிய திட்டமொன்றை செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அந்த வகையில் குறித்த பகுதிகளில் புதிய தேசிய பாடசாலைகளை உருவாக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.வத்தளையில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.அவர் மேலும் கூறும் போது; கல்வித்துறை அபிவிருத்திக்காக இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வரலாற்றில் முதற்தடவையாக அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அத்துடன் வடக்கு, கிழக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு எவ்வித பாகுபாடும் இன்றி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்