யாழ் வலி வடக்கில் மேலும் ஒரு தொகுதி காணிகள் இன்று விடுவிப்பு..!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் படையினர் வசமிருந்த பொதுமக்களின் காணிகளில் 27.5 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்பட்டன.தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் வைத்து விடுவிக்கப்பட்ட காணிகளின் பத்திரங்கள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிடம், யாழ். மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியால் கையளிக்கப்பட்டன.அதனை ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் யாழ். மாவட்ட மேலதிக செயலர்(காணி) முரளிதரனிடம் கையளித்தார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்