அயராத முயற்சியினாலும் மனைவியின் பேராதரவுடனும் சிறையிலிருந்து முதுமானிப் பட்டம் பெற்ற மரண தண்டனைக் கைதி..!!

இலங்கையில் முதல் முறையாக மரண தண்டனை கைதியொருவர் முதுமானி பட்டத்தை பெற்றுள்ளார்.இந்திக்க ஏக்கநாயக்க என்ற கைதியே குறித்த முதுமாணி பட்டத்தை நேற்று (வியாழக்கிழமை) பெற்றுக் கொண்டுள்ளார்.பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இந்திக்க ஏக்கநாயக்க என்ற இலங்கையர் தனது முதுமாணி பட்டத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.அந்தவகையில் அவர் ஏற்கனவே பட்டம் பெற்ற ஒருவராக இருந்தார். இதன்பின்னர் 2017ஆம் ஆண்டு அவர் களனி பல்கலைகழகத்தில் முதுமாணி பட்டம் கற்கையை மேற்கொண்டார்.அந்தவகையில் நேற்று அவருக்கு முதுமாணி பட்டத்திற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இவர் சர்வதேச ரீதியில் 5 ஆம் இடத்தை பெற்றிருப்பதுடன், இலங்கையில் முதல் தடவையாக முதுமாணி பட்டத்தை பெற்ற கைதியென்ற பெருமையையும் அவர் இதனூடாக பெற்றுள்ளார்.இவர் தற்போது குற்றச்சாட்டு ஒன்றின் பேரில் மரணதண்டனை கைதியாக உள்ள நிலையில் ஆயுள் தண்டனை கைதியாக மாற்றப்பட்டிருக்கின்றார்.தனது முயற்சிக்கு தனது மனைவியே முழுமையான ஆதரவை வழங்கியதாக இதன்போது அவர் கருத்து தெரிவித்துள்ளார்.இதனால், மரண தண்டனை கைதியாக இருந்த அவரை ஆயுள் தண்டனை கைதியாக தற்போது மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதேவேளை தனது முயற்சிக்கு தனது மனைவியே முழுமையான ஆதரவை வழங்கியதாகவும் இந்திக்க ஏக்கநாயக்க கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்