ஜனாதிபதி, பிரதமர் செயலக போலி கடிதங்களுடன் வேலை வாய்ப்பு தருவதாக யுவதியை ஏமாற்றிய பாதகன்!

ஜனாதிபதி செயலகத்தின் கடிதம், பிரதமரின் கடிதம் மற்றும் மின்சார சபையின் கடிதம் ஆகியவற்றை போலியான முறையில் தயாரித்து, தொழில் வாய்ப்பு பெற்றுதருவதாக கூறி 2,25,000 ரூபா பண மோசடி செய்த சந்தேக நபரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று (11) இடம்பெற்றதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.ஹட்டன் இலங்கை பேருந்து சபையில் பணியாற்றி ஓய்வு பெற்ற உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு கைது செய்யபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.குறித்த நபர் யுவதி ஒருவருக்கு தொழில் வாய்பு பெற்றுதருவதாக கூறிஇ இது போன்ற போலியான ஆவணங்களை தாமே தயாரித்து ஏமாற்றி பணம் பெற்றுள்ளதாக, குறித்த யுவதி ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார்.இதற்கு அமைய ஹட்டன் பொலிஸாரினால் மேற்கொள்ளபட்ட விசாரணைகளின் போது, குறித்த நபர் கைது செய்யபட்டுள்ளார்.கைது செய்யபட்ட சந்தேக நபர் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் இன்று (12) முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்