மனைவியைப் பிரிந்து வாழ முடியாத துயரில் கணவன் எடுத்த விபரீத முடிவு!! பரிதவிக்கும் பிள்ளைகள்…!

தம்புள்ளையில் தனது மனைவி உயிரிழந்த சோகம் தாங்காமல், கணவர் ஒருவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்துள்ளமை அந்தப் பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.ரத்மல்கஹாஎல பகுதியை சேர்ந்த பியசேன என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.பிற்பகல் முதல் வீட்டில் காணாமல் போயிருந்த குறித்த நபரை தேடும் போதே, அவரது சடலம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் மனைவி உயிரிழந்துள்ளார். மிகவும் நேசித்த மனைவி உயிரிழந்த பின்னர் மன வேதனையிலேயே அவர் காணப்பட்டுள்ளார் என தற்கொலை செய்து கொண்டவரின் மகன் தெரிவித்துள்ளார்.இனி நான் தனியாக வாழ்ந்து என்ன பயன் எனக் கூறி, அவர் பல நாட்களாக தனியாக அழுவார் என மகன் குறிப்பிட்டுள்ளர். கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.எனினும், இந்த முறை அவரை காப்பாற்ற முடியாமல் போனதாக மகன் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.சமகாலத்தில் மனைவிக்காக உயிரை தியாகம் செய்ய துணிந்த கணவனின் அன்பை எண்ணி, இலங்கையர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்