இலங்கை உட்பட பல நாடுகளுக்கு பேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை..!

இலங்கை உட்பட உலக நாடுகளில் மேற்கொள்ளப்படும் வெறுப்பூட்டும் பேச்சுக்களை கட்டுப்படுத்தவும் இணையவெளி துஷ்பிரயோகங்களை தடுக்கவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த 10 ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் பேஸ்புக்-இந்தியா நிறுவனத்தின் மாநாடு ஒன்று நடைபெற்றது.இந்த மாநாட்டின் பின்னரே பேஸ்புக் நிறுவனம் மேற்கண்டவாறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதில் கலந்துகொண்டிருந்த பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய தலைமையக அதிகாரிகள், வெறுப்பூண்டும் பேச்சுக்களை பரப்பிய 40 இலட்சம் பேஸ்புக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.மேலும், பயங்கரவாத நிகழ்ச்சி நிரல்களை ஊக்குவிக்கும் 64 இலட்சம் முகநூல் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இம் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த அந்த அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்