வவுனியாவில் தேசிக்காய்க்கு வந்த கிராக்கி!! ஒரு கிலோ இத்தனை ஆயிரம் ரூபாவா…?

வவுனியா வர்த்தக நிலையங்களில் ஒரு கிலோ கிராம் தேசிக்காய் 1500 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறியளவிலான தேசிக்காய் ஒன்று 20 ரூபாவுக்கும் சற்று பெரிய தேசிக்காய் ஒன்று 30 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.வவுனியா வர்த்தகர்கள் ஒரு கிலோ கிராம் தேசிக்காயை 800 ரூபாவுக்கு கொள்வனவு செய்து அதனை 1500 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றனர்.தற்போதைய நிலையில் வர்த்தக நிலையங்கள், சந்தைகளில் தேசிக்காய்க்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாக குறிப்பிடப்படுகின்றது.கடுமையான வரட்சி காரணமாக இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாகவும் தேசிக்காய் மரங்களுக்கு தண்ணீர் போதாமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்