திருக்கேதீஸ்வர அலங்கார வளைவு தடையுத்தரவை கண்டித்து கண்டனப் பேரணி..!

திருக்கேதீச்சர அலங்கார வளைவு தடை உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம்  ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.திருக்கேதீச்சர அலங்கார வளைவு தடை உத்தரவை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் திருக்கேதீச்சர அலங்கார வளைவிற்கு பிரதேச சபையினால் விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவைக்கண்டித்து இன்று காலை 9.30மணியளவில் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியமும், ஏனைய பொது அமைப்புக்களாலும் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தில் ஆயரே பிரதேச சபையை ஆட்சி செய்யாதே ஆட்களை வெருட்டாதே, எம்மவரைப் பங்கு போடாதே , வீடு வீடாத்திரியாதே, அன்பு செய்வதுபோல் ஆணவம் காட்டாதே, மன்னார் ஆயரே புராதனமான பாரம்பரியத்தை சிதைக்காதே திருக்கேதீச்சர வளைவை மறைக்காதே, ஈழம் எங்கள் பூமி போன்ற வாசகங்களைத்தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்