சிறையிலிருந்தாலும் தன்னம்பிக்கையுடன் படித்து பட்டப்படிப்பை நிறைவு செய்த மரண தண்டனைக் கைதி..!!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திக்க பமுனசிங்க என்ற சிறைக்கைதி இன்று பட்டப்பின் படிப்புக்கான சான்றிதழை பெற்றுக்கொள்ளவுள்ளார்.வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து உயர்தரத்திற்கு தோற்றி இவர் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்தார்.பின்னர் இவர் களனி பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கற்கையை தேடி எம்.ஏ. பட்டதாரியாக சித்தியடைந்திருக்கின்றார்.விரிவுரைகளில் பங்கேற்காது, இவர் பரீட்சைக்கு தோற்றியிருப்பதாக சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள்.பம்பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான முஹமட் ஷியாமின் கொலை வழக்கின் கீழ் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இவர் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் இவர் உப பொலிஸ் பரிசோதகராக பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்