இது வெறும் வெற்றி அல்ல….!11 வருடங்கள் கழித்து விராட் கோஹ்லியை பழிதீர்த்த கேன் வில்லியம்ஸன்!!

2019 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது.கடைசி லீக் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து தோல்விப் பாதையில் இருந்த நியூசிலாந்து அணி, இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 11 ஆண்டுகளுக்கு முன் விராட் கோலியின் தலைமையில் ஒரு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டுள்ளார்.2008ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. அந்தப் போட்டியில் இளம் வீரர்களாக விராட் கோலி – கேன் வில்லியம்சன் தங்கள் அணிகளுக்கு தலைமை ஏற்று வழி நடத்தினர்.அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது 50 ஓவர்களில் 2௦5 ரன்கள் எடுத்தது. அடுத்து இந்திய அணியின் பேட்டிங்கில் மழை குறுக்கிட்டது. பின்னர் இந்திய அணி டிஎல்எஸ் முறைப்படி 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது. அதில் வெற்றியும் பெற்றது.அதன் பின் கேன் வில்லியம்சன் நியூசிலாந்து அணிக்கும், விராட் கோலி இந்திய அணிக்கும் கேப்டன்களாக மாறினர். 2019 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் மோதினர். விராட் கோலி மீண்டும், கேன் வில்லியம்சனை வீழ்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது.இந்தப் போட்டியிலும் நியூசிலாந்து முதலில் துடுப்பாட்டம் செய்தது. போட்டியில் மழை குறுக்கிட்டது. அதனால் போட்டி அடுத்த நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டு தொடர்ந்து நடந்தது.நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 239 ரன்கள் எடுத்தது.அடுத்து சேஸிங் செய்த இந்தியா 49.3 ஓவர்களில் 221 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சுமார் 11 ஆண்டுகள் கழித்து, உலகக்கோப்பை அரங்கில் கேன் வில்லியம்சன், விராட் கோலியை வீழ்த்தி பழி தீர்த்துக் கொண்டார். நியூசிலாந்து அணி அடுத்து இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியாவை சந்திக்க உள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்