விசித்திரச் செயலினால் தனக்கு வயதாகிவிடவில்லையென்பதை நிரூபித்த பிரித்தானிய மகாராணி..!

நேற்று முன்தினம் பிரித்தானிய மகாராணி எலிசபெத் (93), கேம்பிரிட்ஜிலுள்ள தாவரவியல் நிறுவனத்தின் நூறாவது ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அங்கு வருகை புரிந்தார்.National Institute of Agricultural Botany என்னும் அந்த நிறுவனத்திற்கு சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் மகாராணியாரின் தாத்தாவாகிய மன்னர் George Vமற்றும் ராணியார் Mary ஆகியோர் அதே இடத்திற்கு வந்திருந்ததோடு, ராணி அந்த இடத்தில் ஒரு மல்பெரி மரத்தை நடும் காட்சி புகைப்படமாக்கப்பட்டது.இந்த முறை, அதேபோல் hornbeam மரம் ஒன்றை நடுவதை எலிசபெத் மகாராணி மேற்பார்வையிட வேண்டும் என்பது திட்டம்.ஆனால் நிகழ்ச்சி தொடங்கியதும், தனது கைப்பையை ஒரு பெண்ணிடம் கொடுத்த மகாராணி, விறுவிறுவென நடந்து சென்று ஒரு மண்வெட்டியை எடுத்தார்.ஆனால் திட்டப்படி யாராவது ஒருவர், ஒரு மரத்தை நட, மகாராணியார் அந்த மரத்தின் வேரை மண்ணைப் போட்டு மூடினால் போதும்.ஆனால் மகாராணி, இல்லை, இன்னமும் என்னால் ஒரு மரத்தை நட முடியும், என்று கூறியபடி மரத்தை நட்டார்.93 வயதில் அவர் செய்ததைக் கண்ட மக்கள், ராணியின் அர்ப்பணிப்பைக் கண்டு கரவொலி எழுப்பி, மகிழ்ச்சி ஆரவாரம் எழுப்பினர்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்