பத்து வருட தொடர் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி!! பெரிய மடு குளத்தில் மீண்டும் ஆரம்பமான நன்னீர் மீன்பிடி! பெரு மகிழ்ச்சியில் மீனவர்கள்!

மன்னாா்- ஈச்சளவாக்கை, சன்னாா் பகுதிகளில் மிக நீண்டகாலம் நன்னீா் மீன்பிடியில் ஈடுபட்டிரு ந்த மீனவா்களுக்கு 10 வருடங்களாக மறுக்கப்பட்டிருந்த மீன்பிடி அனுமதி மீள வழங்கப்பட்டது.போரில் இடம்பெயர்ந்து மீள் குடியேறி சுமார் 10 வருடங்கள் கடந்த நிலையில் ஈச்சளவாக்கை மற்றும் சன்னார் மீனவர்கள் பெரிய மடு குளத்தில் தொழிலில் ஈடுபட அனுமதிக்கப்படவில்லை.பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்கள் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஊடாக வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டனர்.இதனையடுத்து கடந்த ஜனவரி மாதம் வவுனியா நீரியல் வள திணைக்களத்தின் ஊடாக நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்களுக்கான அனுமதி வழங்கப்பட்டது.எனினும், பெரிய மடு குளத்தில் மீன்பிடிப்பதற்கு சகோதர இன மீனவர்களால் மறுப்புத் தெரிவித்தனர்.மீனவர்களின் கடும் போராட்டத்தின் பயனாக சுமார் ஆறு மாதங்களின் பின்னர் மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்