போட்டியை மாற்றிய அந்த 45 நிமிடங்கள்..!! எல்லாமே கைவிட்டுப் போனது.!! தோல்வியால் துவண்டு போன கோஹ்லி..!

மன்செஸ்டரில் நடைபெற்ற உலகக்கிண்ணம் அரையிறுதியில் நியூஸிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியடைந்த காரணம் தொடர்பில் அணித்தலைவர் கோஹ்லி உருக்கமாக பேசியுள்ளார்.கிரிக்கெட் உலகக்கிண்ணம் அரையிறுதியில் நியூஸிலாந்து அணியிடம் இந்திய அணி போராடி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேற, நியூஸிலாந்து அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.டோனி, ஜடேஜா மகா கூட்டணி 92/6 என்ற தோல்வியின் பிடியிலிருந்து வெளியேற்றி 208 வரை ஸ்கோரை உயர்த்தி வெற்றிக்கு வழிவகுத்தனர்.ஆனால் தேவைப்படும் ரன் விகிதம் எகிற நியூஸிலாந்தும் நிதானமாக பந்து வீசியதோடு, களத்தடுப்பிலும் அசத்த,முதலில் ஜடேஜாவின் விக்கெட்டைப் பறித்து வெளியேற்ற பின்னர் டோனி 50 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனது இந்திய ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், ஆட்டம் முடிந்து பேசிய இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, ஒரு 45 நிமிட மோசமான கிரிக்கெட் ஆட்டத்தினால் தொடரிலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று.இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நியூஸிலாந்து வெற்றிக்குத் தகுதியான அணியே. எங்களை அவர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாக்கி, முக்கியத் தருணங்களிலும் நன்றாக ஆடி மீண்டனர்.நம் ஷாட் தெரிவு இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம். மற்றபடி நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்,நாம் விளையாடிய விதம் குறித்து பெருமை அடைகிறேன். நாக் அவுட் சுற்றுக்கு வந்த பிறகு அதில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்.நியூஸிலாந்து அணி திட்டமிட்டு ஆடினர். அவர்கள் தைரியமாக ஆடினர், இறுதிப்போட்டிக்குச் செல்ல அந்த அணிக்குத்தான் தகுதி உள்ளது.இன்று காலை களம் புகுந்தவுடன் எங்களுக்கு என்ன தேவையோ அதைச் செய்தோம். எந்த ஒரு பிட்சிலும் சேஸ் செய்யக் கூடிய ரன் எண்ணிக்கைக்கு அவர்களை மட்டுப்படுத்தியதாகவே கருதுகிறேன்.ஆனால், முதல் அரைமணி நேரம் நியூஸிலாந்து பந்துவீச்சு இந்த ஆட்டத்தின் போக்கை மாற்றியது.நியூஸிலாந்து அணியின் ஆட்டத்துக்கு உரிய பாராட்டுதலைச் சேர்ப்பிக்க வேண்டும், பந்துகளை நன்றாக ஸ்விங் செய்தனர். மிகவும் தனித்துவமான திறமையுடன் அவர்கள் வீசி எங்களுக்கு ஆட்டத்தை கடினமாக்கினர்.ஜடேஜா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். டோனி அவருடன் சேர்ந்து இறுதி வரை போராடினார், ஆனால் ரன் அவுட் ஆகிவிட்டார் என கோஹ்லி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்