பரபரப்பு நிறைந்த ஐ.சி.சி உலகக் கிண்ணம்… இன்றைய முதல் அரையிறுதியில் இந்தியா- நியூஸிலாந்து மோதல்…! மழை விளையாடவும் வாய்ப்பு..!!

இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் அரையிறுதி போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியும்- நான்காவது இடத்தை பிடித்த நியூசிலாந்து அணியும் மோதவுள்ளன.போட்டி நடைபெறவுள்ள மான்செஸ்டரில் இன்று ஜூலை 9ம்  திகதி காலையில் லேசான மழை பெய்யும் என மான்செஸ்டர் வானிலை முன்னறிவிப்பு கணித்துள்ளது. பின்னர் மேகமூட்டமான நிலைக்கு மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனினும், மழை விட்டு விட்டு பொழியும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்தியா-நியூசிலாந்து போட்டி மழையால் தடைபடும் என கூறப்படுகிறது. மான்செஸ்டரில் அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி இருக்கும் என வானிலை முன்னறிவிப்பு தெரிவித்துள்ளது.இந்தியா-நியூசிலாந்து போட்டி தாமதமாகத் தொடங்குவதைக் காணலாம். ஜூலை 9ம் காலை 50 சதவீதத்திற்கும் அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. லீக் சுற்றில் இந்தியா-நியூசிலாந்து மோதவிருந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.இன்று யூலை 9ம் திகதி போட்டியின் போது மழை குறுக்கிட்டு போட்டி கைவிடப்பட்டால், நாளை ஜூலை 10ம் திகதி போட்டி நடைபெறும். அன்றும் மழை பெய்து ஆட்டம் ரத்து செய்யப்பட்டால், தானாகவே புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும்.நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்த மைதானத்தில் 5 போட்டிகள் நடைபெற்றுள்ளது. 5 போட்டிகளிலும் முதலில் துடுப்பெடுத்தாடிய அணியே வெற்றிப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த மைதானத்தில் தான் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெற்றது. போட்டியின் போது, மழை குறுக்கிட்டதால் இந்திய அணி டக்வத் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்