உயிரினங்களே வசிக்க முடியாத செவ்வாய்க் கிரகத்தில் பறக்கும் விசித்திரப் பறவை..!! அதிர்ந்து போன நாஸா விஞ்ஞானிகள்!

யூஎப்ஓ கருத்தாய்வாளரான ஸ்காட் சி வேரிங் என்பவர் வெளியிட்டுள்ள தகவலின் படி, செவ்வாய்க் கிரகத்தில் பறவை இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்பொழுது வெளியாகி வைரல் ஆகிவருகிறது. இந்த புகைப்படத்தைச் செவ்வாய் கிரகத்தில் உள்ள நாசா கியூரியாசிட்டி ரோவர் படம்பிடித்துள்ளது.வேற்றுகிரகவாசிகளைப் பற்றி நாம் அனைவரும் அதிகம் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனாலும், இன்னும் வேற்றுகிரகவாசிகள் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் உறுதியுடன் கண்டுபிடிக்கப்படவில்லை. வேற்றுக்கிரகத்தில் உயிர் அடையாளங்கள் தேடி நாசா பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.வேற்றுக்கிரகங்களில் உயிர் அடையாளங்கள் தேடித் திரியும் நாசாவிற்கு, செவ்வாய்க் கிரகத்தில் உள்ள நாசா கியூரியாசிட்டி ரோவர் ஒரு புதிய புகைப்படத்தை அனுப்பியுள்ளது.செய்வ்வாய்கிரகத்தில் உள்ள ரோவர் ஒரு பறக்கும் பாறையின் உருவத்தைப் படம்பிடித்துள்ளது.பறவைகள் போல் ஏலியன்விமானங்கள்
இதைச் சிலர் பறவை என்றும், இன்னும் சிலர் வேற்றுகிரகவாசிகள் விமானமாகக் கூட இருக்கக்கூடும் என்றும் வாதாடி வருகின்றனர். பல ஏலியன்களின் விமானங்கள் பறவைகள் போல் இருக்கும் என்று ஏலியன் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.சோல் 2446 மூலம் கைப்பற்றப்பட்ட இந்த கறுப்பு மற்றும் வெள்ளை புகைப்படத்தில், நீங்கள் ஒரு பெரிய கருப்பு புள்ளியைப் பார்க்க முடியும். படத்தில் காணப்படும் கருப்பு புள்ளிதான் செவ்வாய்க்கிரகத்தில் படப்பிடிக்கப்பட்ட பறவை என்று மார்செலோ இராசுஸ்டா தெரிவித்திருக்கிறார்.செவ்வாயில் நிச்சயம் உயிர்கள் இருக்கிறது.பலமுறை இது போன்ற குழப்பமான சூழ்நிலைகளில் நாசா எப்பொழுதும் இரண்டு பதில்கள் வைத்திருக்கும். அதேபோல் இம்முறையும் இரண்டு பதிலைத் தெரிவித்துள்ளது. அந்தப் பறவை பார்ப்பதற்கு கழுகு போல் இருக்கிறது. ஒரு பதில் செவ்வாயில் நிச்சயம் உயிர்கள் இருக்கிறது என்று இந்த புகைப்படத்தைப் பார்த்து நம்பிக்கை கூறலாம்.இல்லை என்றால் சொல்வதற்குச் சற்று கடினமாகத் தான் உள்ளது, இருப்பினும் இதையும் பதிலாக நாசா குறிப்பிட்டுள்ளது. ஒருவேளை இந்த புகைப்படம் செவ்வாயில் எடுக்கப்படாமல் கனடாவில் உள்ள டீவோன் பகுதியில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. டீவோன் பகுதியில் தான் ரோவ்ர்கள் சோதனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்