வட கிழக்கில் பணியாற்றிய தொண்டராசிரியர்கள் 1,119 பேருக்கு இன்று பிரதமர் ரணில் தலைமையில் நிரந்தர நியமனம்..!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் தொண்டர் அடிப்படையில் சேவையாற்றிய 1,119 ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது.அதன்படி குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகஸே்வரன், கிழக்கு மாகாண ஆளுனர் சான் விஜயலால் டிசில்வா மற்றும் வட மாகாண ஆளுனர் சுரேன் ராகவன் ஆகியோரின் பங்கு பற்றலுடன் திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்