தெற்காசியாவிலேயே மிக அதிகமான இணைய வேகத்தை பதிவுசெய்த மொபிட்டல் 5G!

தேசிய மொபைல் சேவை வழங்குனரான மொபிடெல், இலங்கையில் மிகவும் வேகமான 5Gயினை தெற்காசியாவில்; முதன்முறையாக வெற்றிகரமாக அடைந்தது. இது 2019, ஜுன் 7ஆம் திகதி வணிக ரீதியாக 5G மொபைல் ஸ்மார்ட் ஃபோன் இனை பாவித்து 1.55Gbps இற்கும் அதிகமான வேகத்தினைக் கண்டது.2019, ஜுன் 4ஆம் தெற்காசியாவில் முதன்முறையாக வணிக ரீதியாக 5G மொபைல் ஸ்மார்ட் ஃபோன் இனைக் கொண்டு செய்யப்பட்ட 5G வேக பரிசோதனை செயல்முறை விளக்கத்தினைத் தொடர்ந்து, மொபிடெல் ஆனது தெற்காசியாவிலேயே புதிய வேகமான 1.55Gbps இனை பதிவு செய்து சாதனை படைத்தது. இதன் மூலம் உலகெங்கிலுமுள்ள பயன்பாடுகளில் குறிப்பிடத்தக்கதோர் அடையாளத்தை இது உருவாக்கியது.இந்த 5G வேகச் சாதனைப் படைப்பின் விளைவாக Ookla எனப்படும் உலகின் வேக பரிசோதனை தர நிர்ணயத்துக்கான நிறுவனம், மொபிடெலினை தெற்காசியாவின் முதலாவது 5G வலையமைப்பினைக் கொண்ட நிறுவனமாக அங்கிகரித்துள்ளது. இது இலங்கையர் அனைவருக்கும் மிகவும் பெருமையான சாதனையாகும்.இந்த மொபைல் 5G சேவைகள் தொடர்பான செயல்முறை விளக்கமானது Huawei 5G வலையமைப்பினைக் கொண்ட உபகரணங்களினைக் கொண்டு இலங்கையின் தொலைத்தொடர்புகள் ஒழுங்குமுறைகள் ஆணைக்குழு (TRCSL) வழங்கிய 3.6GHz trial spectrum ஒதுக்கீட்டின் மூலம் நடாத்தப்பட்டது. இது இலங்கையின் ICT உருமாற்றத்துக்கு எப்போதும் தமது உற்சாகத்தையும் பலத்தையும் அளித்து வருகிறது. இலங்கையின் மொபைல் ப்ரோட்பாண்ட் சந்தையின் தோற்றத்தை விரிவாக்குவதில் முற்போக்கான ஒழுங்குமுறைகள் அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதானது மொபிடெல் இனை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது.5G சேவைகளின் அடுத்த தலைமுறையானது Giga bit வேகத்தினை வழங்குவது மட்டுமன்றி 5G தொழில்நுட்பத்தின் தீவிர நம்பகத்தன்மை மற்றும் குறைந்த உழைப்புத் திறன் மூலம் உலகம் முழுவதுமுள்ள இத்தொழிற்துறையில் பெரும் புரட்சியையும் ஏற்படுத்தும்.தேசிய மொபைல் சேவை வழங்குனரான Mobitel (Pvt) Ltd ஆனது கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி தெற்காசியாவின் முதலாவது 5G பயன்பாட்டினை காட்சிப்படுத்தியது.ஐக்கிய அமெரிக்கா (2019,ஏப்ரல் 2) மற்றும் தென்கொரியாவில் (2019,ஏப்ரல் 4) 5G பயன்படுத்தப்பட்ட மிக குறுகிய காலத்தில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. வணிக ரீதியான மொபைல் ஸ்மார்ட் ஃபோனினை அதன் 5G வலையமைப்புடன் இணைத்திடும் வெற்றிகரமான நிகழ்வாக மொபிடெலின் இந்த 5G அமுலாக்கம் இருந்தது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்