சமூக வலைத்தளங்களில் மரண தண்டனைக் கைதியின் செல்பி..!! வெளிப்படுத்திய அமைச்சர் ..!

மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் செல்ஃபி புகைப்படம் ஒன்று வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.சிறை அறையில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.இது தொடர்பாக பேஷ்புக்கில் குறிப்பு ஒன்றை இட்டுள்ள பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க,அனைத்து துறைகளின் கவனத்திற்கும், நீதியமைச்சர் தலதா அத்துகோரள, மற்றும் ஹிரு, தனியார் தொலைக்காட்சிகளும் அறிந்து கொள்ளவும். சிறையில் இருந்து IMO தொழிநுட்பம் மூலம் தனது வர்த்தகத்தை செய்யும் பிரபல கைதியை அடையாளம் தெரியுமா? புகைப்பட உதவி சிறைச்சாலை புலனாய்வு பிரிவு எனக் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்