வெறும் மூன்றே வாரங்களில் தென்னாபிரிக்க மாணவர்கள் உருவாக்கிய விமானம்…!!

தென்னாபிரிக்காவில் உயர்கல்வி மாணவர்கள் 20 பேர் இணைந்து, விமானத்தின் உதிரி பாகங்களை கொண்டு சிறிய ரக விமானம் ஒன்றை தமது இருப்பிடத்திலேயே தயாரித்துள்ளனர்.ஆயிரக்கணக்கான உதிரி பாகங்களை கொண்டு 4 பேர் அமரக்கூடிய சிறிய விமானத்தை மூன்றே வாரங்களில் அவர்கள் கட்டமைத்துள்ளனர்.மாணவர்கள் தயாரித்த இந்த விமானம் தென்னாபிரிக்காவின் தலைநகர் கேப்டவுனில் இருந்து எகிப்தின் கெய்ரோ நகரம் வரையிலான தன் முதல் பயணத்தை அண்மையில் ஆரம்பித்தது.சுமார் 12,000 கிலோமீட்டர் தொலைவுடைய இந்த பயணத்தை நிறைவு செய்ய சுமார் ஆறு வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விமானத்தை 17 வயதான மேகன் வெர்னர் என்கிற உயர்கல்வி மாணவி இயக்குகிறார். கேப்டவுனில் இருந்து புறப்பட்ட இந்த விமானம், பயணத்தில் முதல் நிறுத்தமாக சுமார் 1,300 கி.மீ. கடந்து நமீபியா நாட்டின் தலைநகர் வின்ஹோயக்கில் நேற்று (திங்கட்கிழமை) தரையிறங்கியது.

உங்கள் கருத்துக்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள்

கருத்துக்கள்